இப்படி கோட்டைவிட்டா ஜெயிப்பது எப்படி?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் 5 கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்ட இந்திய வீரர்கள், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2வது டி20ல் 3 கேட்ச்களை கோட்டைவிட்டனர். இது குறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில், ‘இந்த மாதிரி பீல்டிங் செய்தால் எவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தாலும் போதாது. கடந்த இரண்டு போட்டியிலுமே எங்கள் பீல்டிங் மோசமாக இருந்தது.

Advertising
Advertising

முதல் 4 ஓவரில் சிறப்பாக செயல்பட்டு நெருக்கடி கொடுத்த பிறகு, ஒரே ஓவரில் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தால் எப்படி ஜெயிக்க முடியும். அந்த ஓவரில் 2 விக்கெட் வீழ்ந்திருந்தால் எதிரணி நிச்சயமாக திணறி இருக்கும். நமது வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ என்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை, வாங்கடே மைதானத்தில் நாளை இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories: