ஒருகிலோ வெங்காயம் ரூ.220க்கு விற்பனை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு உள்ளாட்சி ஓட்டு ஒரு கேடா?: திருச்சியில் பரபரப்பு சுவரொட்டி

திருச்சி: ஒரு கிலோ வெங்காயம் ரூ.220க்கு விற்கும்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு ஒரு கேடா?  மக்களே அறிவாயுதத்தை பயன்படுத்துங்கள் என திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக விவசாயிகள் சங்கம்(கட்சி சார்பற்றது) மற்றும் பொதுநல அமைப்புகள், சமூக நீதி பேரவை ஆகியவை சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இதில் வெங்காயம் விலை கிலோ ரூ.220க்கு உயர்ந்துள்ளது. இதனால் பெண்களின் கண்களில் கண்ணீர் வருகிறது. இயற்கை பேரிடர் பாதிப்பு, உற்பத்தி பொருளுக்கு உரிய விலையின்றி கடன் தொல்லையால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தேசிய விவசாய ஆணையங்களின் பரிந்துரைகளை கிடப்பில் போட்டுவிட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க மத்திய, மாநில அரசுகள் துணை போகிறது. தமிழகத்தில் 3000 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 300 கிலோ எடையில் கல்லாப்பெட்டி தேவையா?  2021க்குள் முழு மதுவிலக்கு என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சே, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு உங்களுக்கு ஒரு கேடா? மக்களே அறிவாயுதத்தை பயன்படுத்துங்கள்.இவ்வாறு அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: