சாலையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

காரைக்கால்: காரைக்காலை  அடுத்த   கீழகாசாகுடி மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து சுனாமி நகர், காஞ்சிபுரம் கோயில் பத்து ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை பள்ளி சாலை என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் இந்த சாலைக்கு இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையின் இருபுறமும்  சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இந்த மரங்கள் சாலையை ஆக்கிரமித்து காணப்படுவதால் இவ்வழியே செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, பள்ளி ரோடு என்ற இந்த சாலையின் ஓரமாக சீமைக்கருவேல மரங்கள்    அதிக அளவில் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.  மழை நேரங்களில் சீமைக்கருவேல மரங்கள் சாய்ந்து சாலையை  ஆக்கிரமித்து விடுகின்றன.  இதன் காரணமாக வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.  இதனை உடனடியாக அகற்றாவிட்டால் சீமைக்கருவேல மரங்கள்   சாலையை முழுமையாக ஆக்கிரமித்து விடும். அரசு இதனை கவனத்தில் கொண்டு விரைவாக மரங்களை அகற்ற வேண்டும் என்றனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கீழகாசாகுடியில் இருந்து   சுனாமி நகர், காஞ்சிபுரம்  கோவில்பத்து செல்ல வேண்டும் என்றால்  இந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டும். இந்த பகுதியில்  பல்வேறு நகர்களும் உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற இப்பகுதியில் உள்ள இந்த சாலையின் ஓரங்களில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. எங்களது ஊரிலிருந்து மாணவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி மிதிவண்டியில்  பள்ளிக்கு செல்கின்றனர். சாலையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களின் காரணமாக பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் இது வளர்ந்து  சாலையை முற்றிலும் ஆக்கிரமிப்பதற்குள் அதனை  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். மழை நேரங்களில் சீமைக்கருவேல மரங்கள் சாய்ந்து சாலையை  ஆக்கிரமித்து விடுகின்றன.  இதன் காரணமாக வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

Related Stories:

>