கர்நாடகா 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: பாஜக 10 தொகுதிகளில் முன்னிலை, மஜத 1 தொகுதி, காங்கிரஸ் 2 தொகுதி

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்களும் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர்.  இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை அடுத்து, காலியான இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

கர்நாடகத்தில் தற்போது பதவி வகிக்கும் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி தொடர கட்டாயம் 6 தொகுதிகளில், பாஜக வெற்றி பெறுவது அவசியம் ஆகும்.  இதனால், கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. இதில், பாஜக 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 1  இடத்தில் மஜத முன்னிலை வகிக்கிறது. 2 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தற்போதுள்ள முன்னணி நிலவரம், வாக்கு எண்ணிக்கை இறுதி வரை நீடிக்கும் பட்சத்தில் பாஜக ஆட்சிக்கு எந்த சிக்கலும் ஏற்படாது எனத்தெரிகிறது.

கோகாக், சிக்பளாப்பூர், விஜயநகர், எல்லாப்பூர் உள்பட 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். சிக்பளாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுதாகர் 5,424 வாக்குகள் பெற்று முன்னிலைியில் உள்ளார். மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் பாஜக வேட்பாளர் கோபாலலையா 4,052 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். விஜயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் 3,705 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். எல்லாப்பரா தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராம் ஹெப்பார் 10,716 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதானி தொகுதியில் பாஜக வேட்பாளர் 3,821 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கே.ஆர்.பேட்டை தொகுதியில் மதசார்பந்ந ஜனதா தள வேட்பாளர் தேவராஜ் 7,068 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். யஷ்வந்த்பூர் தொகுதியில் மதசார்பந்ந ஜனதா தள வேட்பாளர் ஜவராயி கவுடா 2,091 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஹூக்சூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மஞ்சுநாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.பி.மஞசுநாத் 4,008 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஹொஸ்கோட்டில் சுயேட்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா முன்னிலையில் உள்ளார்.

Related Stories: