‘சேப்டி நூன்சாக்கு’ பதக்கங்களை அள்ளிய தமிழகம்

சென்னை:  டெல்லியில் சர்வதேச தற்காப்புக் கலை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் கராத்தே, டேக்வாண்டா, ஜுட்கேண்டா, வெபன்ஸ் ஆகியவற்றுடன், முதல் முறையாக தமிழக தற்காப்புக் கலையான ‘சேப்டி நூன்சாக்கு’ம் சேர்க்கப்பட்டது. இந்தக் கலையை முதல்முறையாக வகைப்படுத்திய சேப்டி நூன்சாக்  கலை நிபுணர் எஸ்.கோதண்டன் தலைமையில், 2 தமிழக குழுக்கள் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.அதில் தமிழக வீரர், வீராங்கனைகள் மட்டும் 9 தங்கம், 9 வெள்ளி, 15 வெண்கலம் உட்பட 33 பதக்கங்களை கைப்பற்றினர்.  

Advertising
Advertising

இதில் வருண் தனி நபர் கட்டா, குழு கட்டா, தனித்திறன் பிரிவுகளில் தலா ஒரு தங்கம் வென்று அசத்தினார். கராத்தே பிரிவில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை எஸ்.கோதண்டன் பாராட்டினார்.

Related Stories: