திருக்கழுக்குன்றத்தில் லாரியில் பேட்டரி திருடிய எஸ்.ஐ அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: திருக்கழுக்குன்றத்தில் வழக்கில் பிடிபட்ட லாரியில் இருந்த பேட்டரியை திருடிய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் பாலாற்றில் மணல் திருடிய ஒரு லாரியை கடந்த 3ம்தேதி காலை திருக்கழுக்குன்றம் போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து அந்த லாரியை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள கிரிவலப் பாதை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Advertising
Advertising

இந்நிலையில் அன்று இரவே திருக்கழுக்குன்றம் எஸ்.ஐ. கார்த்திகேயன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் முருகன் ஆகியோர் லாரி நிற்குமிடத்திற்கு சென்று  மணல் திருட்டில் பிடிபட்ட லாரியிலிருந்து பேட்டரியை திருடி எடுத்துக் கொண்டு அவர்கள் தயாராக கொண்டு வந்த ஒரு காரில் வைப்பது போன்ற சிசிடிவி காட்சியும், அதேபோல் ஒரு பெரிய கேனை எடுத்துக் கொண்டு டீசல் எடுக்க செல்லும் காட்சியும் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. கார்த்திகேயனை காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றினார். தொடர்ந்து,  தீவிர விசாரணை நடத்திய பின், நேற்று   எஸ்.ஐ. கார்த்திகேயன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: