உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: தீவைத்து எரிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், தீவைத்து எரிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உபி.யின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் நேற்று காலை ரேபரேலியில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜாமீனில் வெளியே வந்த 2 பேரும் அவரை வழிமறித்து தமது நண்பர்களுடன் சேர்ந்து தீ வைத்த கொளுத்தினர். பெண்ணின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஏற்கனவே தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் 2 பேர் உட்பட மொத்தம் 5 பேர் தன்னை தீவைத்து கொளுத்தியதாக அப்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், லக்னோவிலிருந்து நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே உள்ள சப்தார்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த இளம்பெண் உயிர் பிழைப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் ஷலப் குமார், 90 சதவீதம் தீக்காயம் பெ்றறுள்ள அப்பெண் உயிர் பிழைப்பதற்கு குறைந்த அளவிலான வாய்ப்புகளே உள்ளது. தற்போது அவரை வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது உயிரணுக்கள் கூட மிகவும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து பேசிய மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரான மருத்துவர் சுனில் குப்தா, பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்காக ஒரு பிரத்யேக ஐ.சி.யூ அறையை அமைத்துள்ளோம். மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, என்று கூறியுள்ளார்.

Related Stories: