அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் திடீர் விலகல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் திடீரென விலகியுள்ளார்.  அமெரிக்கா செனட்டின் உறுப்பினராக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ். ஜனநாயக கட்சியை ேசர்ந்த இவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல்வாதியாக விளங்கினார். இந்த கட்சி சார்பில் ஜோ பிடன். பெர்னி சான்டர்ஸ், எலிசபெத் வாரன் ஆகியோரும் அதிபர் வேட்பாளர்போட்டியில் உள்ளனர். தற்போது, அதிபராக உள்ள டிரம்பும் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக களத்தில் உள்ளார். வேட்பாளர் தேர்வில் ஆரம்பத்தில் அதிக ஓட்டுகளை பெற்று முன்னிலை பெற்று வந்த கமலா, பிறகு அதில் இருந்து சரியத் தொடங்கினார்.

இந்நிலையில், வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அவர் திடீரென அறிவித்தார். தனது பிரசாரத்திற்கு போதுமான நிதி கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். டிரம்ப் கிண்டல்: இது பற்றி டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `மிக மோசம், நாங்கள் உங்களை தவற விடுகிறோம் கமலா,’ என கிண்டல் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள கமலா, ‘கவலைப்படாதீர்கள் அதிபரே, நான் உங்களை விசாரணையின்போது சந்திப்பேன்’ என  அவர் மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்த விசாரணையை தொடர்பு படுத்தி பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories: