குடியுரிமை திருத்த மசோதா குறித்து வடகிழக்கு முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை

புதுடெல்லி: குடியுரிமை திருத்த மசோதா குறித்து வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள், கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். குடியுரிமை திருத்த மசோதா குறித்து வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள், கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன்  உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 29ம் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று நடந்த கூட்டத்தில், அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், அருணாச்சல் முதல்வர் பீமா காண்டு, மேகாலயா முதல்வர் கோன்ராட் சங்மா, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் எம்பி.க்கள் பலர் பங்கேற்றனர்.

இது குறித்து அசாம் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ``கடந்த வெள்ளிக்கிழமை திரிபுரா, மிசோரத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்களுடன் குடியுரிமை திருத்த மசோதா குறித்து அமித்ஷா 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேச பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். திட்டங்கள், அதன் செயல்பாடுகள் சரியான திசையை நோக்கி பயணிக்கிறது’’ என்றார்.

Related Stories: