சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடிய விடிய மழை வெளுத்துவாங்கும் : டுவிட்டரில் தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடிய விடிய மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் விடாது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் விளக்கம் அளித்துள்ளார். அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் ஆகியுள்ளது.

ஆதலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் என்று  தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும் பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் ஆகும் இது என்றும் தமிழ்நாடு வெதர்மேன்  கூறியுள்ளார். 

Related Stories: