சூரத்: சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் அரை இறுதியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அரியானா அணியை வீழ்த்திய கர்நாடகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சூரத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், அரியானா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. கர்நாடகா அணியின் அபிமன்யு மிதுன் வீசிய 20வது ஓவரில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 15 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து அபாரமாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றது.