சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை முதல் மிக  கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் [பேசுகையில், தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1, 2ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு வங்கக்கடல்,குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் தஞ்சை மாவட்டம் கீழணை பகுதியில் தலா 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.மேலும் மயிலாடுதுறையில் 8 செ.மீ. மழையும், ஜெயங்கொண்டம் மற்றும் மணல்மேடு பகுதியில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை அரியலூரில் 275.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக சென்னையில் 387.9 மி.மீ. கோவை 378.1 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான வெப்பநிலை 31 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமான வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: