டிஸ்மிஸ் ஆன போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் வேலை

திருமலை: தெலங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர், அவர் அளித்த பேட்டி: தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சை கேட்டு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வாழ்வில் நஷ்டம் அடைந்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 49,500 ஊழியர்களும் நாளை (இன்று) முதல் பணியில் சேரலாம். போக்குவரத்து கழக நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக உடனடியாக 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருமுறை மட்டுமே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.

எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது 30 பேர் வரை தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர்கள்  குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு போக்குவரத்து துறையிலோ அல்லது அரசின் வேறு ஏதாவது துறையில் கட்டாயம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: