அபுதாபி டி10 தொடர் மராத்தா அரேபியன்ஸ் சாம்பியன்

அபு தாபி: அபு தாபி டி10 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மராத்தா அரேபியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மராத்தா அரேபியன்ஸ் கேப்டன் டுவைன் பிராவோ பீல்டிங்கை தேர்வு செய்தார். டெக்கான் அணி 10 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 87 ரன் குவித்தது. ஆசிப் கான் ஆட்டமிழக்காமல் 25 ரன் விளாசினார். பானுகா ராஜபக்ச 23, ஷாஷத் 14, கட்டிங் 12 ரன் எடுத்தனர். மராத்தா பந்துவீச்சில் பிராவோ 2, மெக்லநாகன், மலிங்கா, ரஜிதா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மராத்தா அணி 7.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தி கோப்பையை முத்தமிட்டது. கிறிஸ் லின் 16, ஆடம் லித் 2 ரன்னில் வெளியேறினர். சாத்விக் வால்டன் 51 ரன் (26 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), நஜிபுல்லா ஸத்ரன் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாத்விக் வால்டன் ஆட்ட நாயகன் விருதும், கிறிஸ் லின் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories: