குவாங்சோ: சீனாவில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி எடுத்து மருத்துவர்கள் இருவர் காப்பாற்றியுள்ளனர். தெற்கு சீனாவின் குவாங்சோ நகரில் இருந்து நியூயார்க்கிற்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானத்தில் பயணம் செய்த முதியவர் சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் அவதிக்குள்ளானார். விமானத்தில் பயணம் செய்த ஜாங்ஹாங், ஜாங்சியாவ் ஆகிய மருத்துவர்கள் முதியவரின் உடல்நிலையை சோதனை செய்தனர். பின்னர் சிறுநீரை வெளியேற்றும் வகையில் விமானத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றின் மூலம் சிறுநீரை வெளியேற்றும் முயற்சி பலனளிக்கவில்லை.