காகிதம் இல்லாத தலைமை செயலகம் பயிற்சி வகுப்பு 25ல் தொடக்கம்

சென்னை: மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள் மூலம் செயல்படுத்தி, காகிதங்கள் பயன்படுத்தாமல் அனைத்து நடவடிக்கைகளையும் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளும் வசதியை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் தனபால் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, நேஷனல் இ-விதான் அப்ளிகேஷன் திட்டத்தினை சென்னை, தலைமை செயலகத்தில் நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்காக தலைமை செயலக அலுவலர்களுக்கு வருகிற 25 மற்றும் 26ம் தேதி பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. தலைமை செயலகத்தில் உள்ள குழு கூட்ட அறையில் நடைபெறும் பயிற்சி வகுப்பை 25ம் தேதி காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால் துவக்கி வைக்கிறார்.

Related Stories: