சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் கண்களை கவரும் செங்காந்தள் மலர்கள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் செந்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்ததால் வறண்டு கிடந்த வனப்பகுதியில் மரம், செடி கொடிகள் துளிர்விட்டு பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. இந்த வனப்பகுதியின் ஒரு சில இடங்களில் செங்காந்தள் மலர்செடிகள் படர்ந்துள்ளன. கார்த்திகை மாதத்தில் பூக்கும் செங்காந்தள் மலர், தற்போது வனப்பகுதியில் பூக்க ஆரம்பித்துள்ளதால் இந்த செடி இருக்கும் வனப்பகுதி முழுவதும் ரம்மியமாக உள்ளது.

தமிழ்நாட்டின் மாநில மலரான இந்த செங்காந்தள் மலர் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில் அழகாக பூத்துள்ளது. சாலையோர வனப்பகுதியில் பூத்துள்ள இம்மலர்களை வாகன ஓட்டிகளும், பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனர். இப்பூக்களை அதிக நேரம் உற்றுப்பார்த்தால் கண்வலி ஏற்படும் என கூறப்படுவதால் கண்வலி மலர் என்றும் அழைக்கப்படுகிறது.

Related Stories: