சேலத்தில் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி மகளிர் அமைப்பினர் போராட்டம்

சேலம்: சேலத்தில் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகளிர் அமைப்பினர் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்தவித துப்பும் கிடைக்காததால் குற்றவாளிகளை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு தனியாக வீடு திரும்பிய 2ம் வகுப்பு மாணவியை 3 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆரமங்கலம் கிராமத்தை சேர்ந்த  6 வயது சிறுமியை கடந்த வாரம் 3 பேர் கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் போலீசார் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டுவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பினர் கூட்டாக இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ததோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் மெத்தன போக்காக செயல்படுவதாகவும், அலட்சியமாக செயல்படுவதாகவும் போராட்டத்தில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளிகள் யார் என்பது குறித்த அடையாளத்தை பொதுமக்கள் தெரிவித்தும் கூட காவல்துறையினர் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: