பாகிஸ்தான் சாகின்-1 ஏவுகணை சோதனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாகின் 1 ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு  ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியா -பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அணு ஆயுதங்களை ஏந்தி சென்று  தாக்குதல் நடத்தும் காஸ்னவி ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. இது  290 கி.மீ. தூரத்தில் தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன்  பெற்றதாகும். இந்நிலையில் அணு ஆயுதத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

Related Stories: