சாத்தான்குளம் அருகே துவர்க்குளத்தில் அபாய நிலையில் கிணறு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே துவர்க்குளத்தில் பள்ளி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அபாய நிலையில் காணப்படும் கிணற்றை மூட வேண்டும் என கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் ஊராட்சிக்குள்பட்ட துவர்க்குளத்தில் உள்ள ஆர்.சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அபாயமான நிலையில் பாழடைந்த திறந்த நிலையில் கிணறு காணப்படுகிறது. இதன் அருகில் பள்ளி மாணவர்களும், குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்பவர்களும் வந்து செல்கின்றனர்.

மேலும் குழந்தைகளும் இதன் அருகில் நின்று விளையாடி வருகின்றனர். இதில் சிறுவர்கள் மற்றும் ஆடு, மாடுகள் தவறிவிழுந்து உயிரிழக்கும் அபாய நிலை காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை, எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அபாய கிணற்றை மூட வேண்டும் அல்லது மழைநீர் சேகரிக்கும் வகையில் அதனை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: