பீஜிங்கில் நடக்கும் கலப்பு தற்காப்பு கலை போட்டியில் ரிது போகட்

பீஜிங்: மல்யுத்த போட்டியில் பல மைல் கல்லை எட்டியவர் ரிது போகட். காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம், 23 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் மற்றும் பல முறை தேசிய சாம்பியனான ரிது போகட் தற்போது கலப்பு தற்காப்பு போட்டியில் தனது பாதையை திருப்பியுள்ளார். பீஜிங்கில் ஒன் சாம்பியன்ஷிப் ஏஜ் ஆப் டிராகன்ஸ் கலப்பு தற்காப்பு கலை(எம்.எம்.ஏ) சாம்பியன்ஷிப் போட்டி நாளை(16ம் தேதி)தொடங்குகிறது. இதில் முதல் முறையாக ரிது போகட் பங்கேற்கிறார். நாளை நடக்கும் போட்டியில் இவர் தென் கொரியா வீராங்கனை நம் ஹி கிம் என்பவரை சந்திக்கிறார்.

போட்டி குறித்து ரிது போகட் கூறுகையில், மல்யுத்த போட்டியில் இருந்து முழு மனதுடன் கலப்பு தற்காப்பு கலை போட்டியில் குதித்துள்ளேன். என்னுடைய லட்சியம் கலப்பு தற்காப்பு கலைபோட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெறும் முதல் இந்திய பெண்ணாக இருக்கவேண்டும் என்பதுதான். நான் நல்ல தகுதியுடன் உள்ளேன். என்னுடைய புதிய முயற்சி நிச்சயம் இந்திய பெண்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்றார். உலக அளவில் கால்பந்து,கூடைப்பந்துக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர்கள் கொண்ட போட்டியாக கலப்பு தற்காப்பு கலை போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: