திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பத்திற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை: குடும்பத்தினர்

டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பத்திற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என சிதம்பரத்தின் குடும்பத்தினர்கள் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் 2017-ம் ஆண்டு, விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதாக சிபிஐ எப்ஐஆர்., பதிவு செய்தது. 2018-ம் ஆண்டு, சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கு தொடர்ந்தது. ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் இந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சிபிஐ., சிதம்பரத்தை கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருவதுடன், அவரின் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, நேற்று டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதற்கிடையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சிதம்பரத்தின் குடும்பத்தினர் கூறுகையில், சிறையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எங்களுக்கு திருப்தி இல்லை என தெரிவித்தனர். அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறினர். சிறையில் அடைக்கப்பட்டது முதல் இதுவரை 8 முதல் 9 கிலோ உடல் எடை குறைந்துள்ளார் என தெரிவித்தனர். அவர் உடனடியாக சிகிச்சைக்காக ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளனர். 2016-ல் அவருக்கு சிகிச்சை அளித்த குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நாகேஸ்வர ரெட்டிக்கு தான் சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து தெரியும் என தெரிவித்தனர். ஜாமின் மனு மீது டெல்லி ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம் என்றனர்.

Related Stories: