தமிழகத்தில் குடிநீர், வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி பெறுவது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை

வாஷிங்டன் : அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, தமிழகத்தில் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து  மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கான ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வின் போது உலக வங்கி செயல் இயக்குநர் செல்வி.அபர்ணா, தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர்  கிருஷ்ணன், மற்றும் உலக வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழக பொது நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து சர்வதேச நிதி நிறுவனத்தின் அதிகாரிகளுடனும் துணை முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்

Related Stories:

>