யூதர்கள், முஸ்லிம்களுக்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் அதிகம் தாக்கப்படுவது சீக்கியர்

வாஷிங்டன்: அமெரிக்காவின்  உள்நாட்டு உளவுத்துறை எப்பிஐ ஆண்டு அறிக்கை: அமெரிக்காவில் கடந்த ஆண்டு நிறவெறி, இனவெறி தொடர்பாக 7,120 குற்றங்கள் நடந்துள்ளன. 2017ம் ஆண்டில் 9175 குற்றங்கள் நடந்திருந்தன. இவற்றுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் இந்த குற்றங்கள் குறைந்துள்ளன.இனம், வம்சாவளி, மதம், பாலியல், பாலினம், இயலாமை போன்றவற்றை சார்ந்து இந்த குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக மதத்தை அடிப்படையாக கொண்டே அதிக குற்றங்கள் நடந்துள்ளன.

இந்தாண்டில் யூதர்களுக்கு எதிராக 835 குற்றங்களும், முஸ்லிம்களுக்கு எதிராக 188, சீக்கியர்களுக்கு எதிராக 60 குற்றங்களும் நடந்துள்ளன. இந்துக்களுக்கு எதிராக 12, புத்தமத்தை சேர்ந்தவர்ளுக்கு எதிராக 10 சம்பவங்களும், மற்ற இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக 91 குற்றங்களும் அர ங்கேறி உள்ளன என கூறப்பட்டுள்ளது.

Related Stories: