லக்னோ: ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன் குவித்தது. ஹஸ்ரதுல்லா 50, அஸ்கர் ஆப்கன் 86, நஜிபுல்லா ஸத்ரன் 30, முகமது நபி 50 ரன் விளாசினர்.
ஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்
- ஆப்கானிஸ்தான்
- ஷாய் ஹோப் அதிரடி வெட்டு ஒயிட்வாஷ்
- ஷாய் ஹோப் அதிரடி நூற்றாண்டு வெள்ளை தொழில்கள் ஆப்கானிஸ்தான்