தஞ்சை பெரிய கோயிலில் நந்தி சிலை பெட்டகத்தை உடைத்த வாலிபர்

தஞ்சாவூர்:  தஞ்சை பெரிய கோயிலில் பெரிய நந்தி சிலை உள்ளது. பெருவுடையார் சன்னதியில் சிறிய நந்தி சிலை உள்ளது. இந்த நந்தி சிலையை பக்தர்கள் தொட்டு வணங்கி வந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி நந்தி சிலையை  பக்தர்கள் தொட முடியாதவாறு பைபர் கண்ணாடி பெட்டியால் மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் பெரிய கோயிலுக்கு நேற்று முன்தினம் ஒரு வாலிபர் வந்தார். அவர் திடீரென சிறிய நந்தி சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டகத்தை கையால் ஓங்கி அடித்தார். அதில் பெட்டியின் ஒரு பகுதி உடைந்

தது.  இதை பார்த்த கோயில் குருக்கள் விரைந்து சென்று வாலிபரிடம் எதற்காக கண்ணாடி பெட்டியை உடைக்கிறீர்கள் என்று கேட்டனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் சிலை இருந்த கண்ணாடி பெட்டியை கையால் உடைத்து  கொண்டிருந்தார்.

 இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் குருக்கள் தெரிவித்தனர். உடனே போலீசார் வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்தார். இதையடுத்து  தஞ்சை மேற்கு போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் வாலிபரை சேர்த்தனர்.

Related Stories:

>