நாட்டின் முதல் தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரசில் ரூ70 லட்சம் லாபம்

புதுடெல்லி: டெல்லி - லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தனியார் ரயில், கடந்த அக்டோபர் 5 முதல் 28 தேதி வரையிலான 21 நாட்களில் ரூ.70 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. நாட்டில் உள்ள 50 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும், 150 பயணிகள் ரயிலை தனியார் நிறுவனங்களின் மூலம் இயக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக, டெல்லியில் இருந்து லக்னோ வரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனம் கடந்த மாதத்திற்கான லாப கணக்கு அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதில், `இந்த ரயிலை இயக்குவதற்கு மானியமாக ரயில்வே துறை நாளொன்றுக்கு ரூ.14 லட்சம் செலவிட்டு உள்ளது.

அதே சமயம், பயணிகள் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ரூ.17 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வாரத்துக்கு 6 நாட்கள் மட்டுமே இயங்குவதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் 5 முதல் 28 தேதி வரையிலான, 21 நாட்களில் ஏறக்குறைய ரூ.70 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. 21 நாட்கள் இந்த ரயிலை இயக்க மொத்தமாக ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது. பயணிகள் டிக்கெட் விற்பனை மூலம் ரூ.3.70 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் இருந்து ரூ.70 லட்சம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: