செங்கம் தளவாய் நாயக்கன் பேட்டையில் ஆபத்தான நிலையில் இருந்த திறந்தவெளி கிணறு மூடல்

செங்கம்: திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மாவட்டத்தில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்து மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், செங்கம் டவுன் தளவாய் நாயக்கன் பேட்டை ரேஷன் கடை அருகில் திறந்தவெளி கிணறு ஒன்று பாழடைந்து மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும், திறந்த வெளி கிணற்றின் அருகில் தொடக்கப் பள்ளி உள்ளதால் பேராபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மூடப்படாமல் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது. அதன்பேரில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று ஆபத்தான நிலையில் இருந்த திறந்தவெளி கிணற்றை கட்டுக்கல்லை அடுக்கி பாதுகாப்பாக மூடிவைத்தனர்.

Related Stories: