திருச்சி சிறை வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு கைதிகள் 15 பேர் அரசு மருத்துவமனையில் தர்ணா

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 37 பேர், வங்கதேசத்தினர் 30 பேர், சீனா, பல்கேரியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மன் நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 72 பேர்  அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் வழக்கை விரைந்து முடித்து, சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 46 பேர் நேற்றுமுன்தினம்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் 2வது நாளில் 15 பேர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டது. அவர்கள் நலமடைந்ததை தொடர்ந்து 15 பேரும் நேற்று முகாம் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறைக்கு கிளம்பும் முன் 15 பேரும் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை முன் சிறிது நேரம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். முகாம் சிறையில்  நேற்று 3வது நாளாக உண்ணாவிரதம் நடந்து வருகிறது. அவர்களுடன் இவர்களும் சேர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: