மும்பை: தங்கத்தின் தேவை இந்த ஆண்டில் முந்தைய ஆண்டைவிட 8 சதவீதம் குறைந்துவிட்டது. அதாவது 700 டன்களாக குறைந்துள்ளது. இது, கடந்த 2016ம் ஆண்டில் இருந்து கடந்த மூன்று ஆண்டில் மிகவும் குறைவானதாகும். உலக தங்க கவுன்சிலின் மேலாண்மை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் தங்கத்தின் நுகர்வு ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட மூன்றில் ஒரு பங்காக, அதாவது 123.9 டன்களாக குறைந்துவிட்டது. உலகளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உள்ளது.