ராஜ ராஜ சோழன் சதய விழாவில் சர்ச்சைக்குரிய மின் அலங்கார ஆர்ச் இந்து எழுச்சி பேரவை போராட்டம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் சதய விழாவையொட்டி சர்ச்சையை ஏற்படுத்தும் மின் அலங்கார வளைவு அமைத்தற்கு இந்து எழுச்சி பேரவையினர் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா இன்று காலை துவங்கியது. இவ்்விழாவையொட்டி பெரிய கோயில் வளாகம் மற்றும் ஆத்துப்பாலம், ராஜ ராஜ சோழன் சிலை முன், பின் என 2 இடங்கள் உள்பட 4 இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழன் சிலை முன்பும் பின்பும்  அமைக்கப்பட்டுள்ள மின் அலங்கார வளையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சந்தனகூடு போல் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்து எழுச்சி இளைஞர் பேரவையினர் ஏராளமானோர் நேற்றிரவு 11 மணி அளவில் ராஜ ராஜ சோழன் சிலை அருகே உள்ள வளைவு முன் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  அறநிலையத்துறையை கண்டித்து

கோஷமிட்டனர்.தகவலறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், உலக புகழ்பெற்ற மாமன்னன் சதய விழா மற்றும் தமிழக கட்டிட கலைக்கு உலக அளவில் பெருமை தேடி தந்தது பெரிய கோயில். இந்நிலையில்  சதய விழாவையொட்டி அமைக்கப்பட்ட வளைவில் சர்ச்சைக்குரிய வகையில் மின் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இதனை உடனே மாற்ற வேண்டும். இதற்கு அனுமதி கொடுத்த இந்து சமய அறநிலையத்துறையினர்  மீது நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்றனர். தவறு நடந்துவிட்டதாகவும், இன்றுக்குள் மாற்றி அமைக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததால் அவர்கள் கலைந்துசென்றனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: