லண்டன்: மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக் பெண் ஊழியருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.பிரபல உணவு நிறுவனம் மெக்டொனால்ட்ஸ். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக். இவர் நிறுவன பெண் ஊழியர் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மெக்டொனால்ட் நிறுவனம் அவர் மீது அதிரடி நடவடிக்ைக எடுத்து, ஸ்டீவ் ஈஸ்டரை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.