அரபிக்கடலில் உள்ள மகா புயல் விலகி செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: அரபிக்கடலில் உள்ள மகா புயல் விலகி செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.  

கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் உருவான மஹா புயல், லட்சத் தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வானிலை மையம், மஹா புயல், தற்போது தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகளை ஒட்டி மையம் கொண்டுள்ள மஹா புயல், வடக்கு, வடமேற்கு திசையில், மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக, கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகமான பாதிப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மஹா புயலால், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில், மணிக்கு 95 கிலோ மீட்டரில் இருந்து, 115 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: