சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை:  காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை 6 வது குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவையில் ஜே.சி.எம்.எஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை சரிதா நாயர், காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் ரூபாய் 28 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் உதகையை சேர்ந்த வெங்கட்ராமன், ஜோயோ ஆகியோரும் சரிதாவிடம் ரூபாய் 5.5 லட்சம் தந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சரிதா நாயர், முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் மீது கோவையில் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது, அவரது கணவர் சிபி ராதாகிருஷ்ணன் ஒரு சில வாய்தாகளுக்கு மட்டும் ஆஜராகியிருந்தார். பல்வேறு வாய்தகளுக்கு ஆஜராகாமல் இருந்த தன் காரணமாக அந்த வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நடிகை சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories: