நெமிலி பாலா பீடத்தில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

வேலூர்: நெமிலி பாலா பீடத்தில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. பீட நிர்வாகி மோகன்ஜி வள்ளி, தெய்வானை உடனுறை முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தார். விழாவின் சிறப்பு அம்சமாக பாலா பீடாதிபதி நெமிலி எழில்மணி எழுதி சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பாடியுள்ள ‘சிந்தையெல்லாம் அந்த கந்தன்வசம் நெஞ்சம் சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம்’ என்ற சிறப்பு குறுந்தகட்டின் மறு வெளியீட்டு விழா நடந்தது.

தொடர்ந்து குருஜி நெமிலி பாபாஜியின் முருக பாராயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பாலாபீட செயலாளர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: