2014 முதல் அமெரிக்காவில் புகலிடம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை 22,000த்திற்கும் அதிகம்: சத்னம் சிங் சாஹல் தகவல்

வாஷிங்டன்: 7,000 பெண்கள் உட்பட 22,000-த்திற்கும் அதிகமான இந்தியர்கள் 2014-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் புகலிடம் கோரியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வட அமெரிக்க பஞ்சாபியர் கூட்டமைப்பின் செயல் இயக்குநர் சத்னம் சிங் சாஹல் கூறும்போது, இந்தியர்கள் பெரும்பாலும் புகலிடம் கோருவதற்குக் காரணம் ஒன்று வேலைவாய்ப்பு இன்னொன்று சகிப்புத்தன்மையின்னை அல்லது இரண்டுமே என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

2014 முதல் சுமார் 22, 371 இந்தியர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரியுள்ளனர். இந்தத் தகவலை வட அமெரிக்க பஞ்சாபியர் கூட்டமைப்பு தகவல் சுதந்திரச் சட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை தேசியப் பதிவேட்டிலிருந்து பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை உண்மையில் கவலையளிப்பதாகும் சத்னம் சிங் சாஹல் என்கிறார். புகலிடம் கோருபவர்களில் 6,935 பேர் பெண்கள், 15,436 பேர் ஆடவர்கள் ஆவார்கள். புகலிடம் கோருபவர்களுக்காக பணியாற்றும் சத்னம் சிங் மேலும் கூறும்போது, சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் புகலிடம் கோரும்போது அவர்களது துயரம் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றார்.

அமெரிக்காவுக்குள் எப்படியாவது நுழைந்து விடுபவர்கள் தனியார் வழக்கறிஞர்களை உதவிக்கு நாடுகின்றனர். ஆனால் அவர்கள் கேட்கும் தொகையை இவர்களால் கொடுக்க முடியாது என்பதே உண்மை. எனவே கடினப்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் அமெரிக்காவில் புகலிடம் கோரும் இந்தியர்கள் சட்ட நடைமுறையின்படி இதனை மேற்கொண்டால் நல்லது ஆகும்.

புகலிடம் கோருபவர்கள் நீண்ட, வலிநிறைந்த காத்திருப்பு காலக்கட்டத்தைக் கடக்க வேண்டியுள்ளது. மேலும் இவர்களுக்கு புகலிட அனுமதி கிடைத்தாலும் தன் குடும்ப உறுப்பினர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு அழைத்து வர முடியாது. முன்னதாக இந்த மாதத்தில் மெக்சிகோ சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் மெக்சிகோ வழியாக நுழைய முயன்ற 311 இந்தியர்களை திருப்பி அனுப்பியது. செப்.2019 கணக்கின் படி ட்ரம்ப் அரசில் குடியேற்ற நீதிபதிகளின் முன் 10,23,767 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சத்னம் சிங் கூறுகிறார்.

Related Stories: