கூட்டாளிகள் காட்டிக்கொடுத்ததாலேயே ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவன் பாக்தாதின் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக தகவல்

வாஷிங்டன்: கூட்டாளிகள் காட்டிக்கொடுத்ததாலேயே ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாத்-ன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு துருக்கி ராணுவத்திடம் இஸ்மாயில்  அல் இதாவி என்ற பாக்தாதியின் உதவியாளர் சிக்கினான். இருப்பிடத்தை தவிர்க்கும் வகையில் காய்கறி ஏற்றி செல்லும் வண்டியில் பாக்தாதி, ஐ.எஸ்.தீவிரவாதிகளை சந்திக்கும் தகவல் இஸ்மாயில் மூலம் தான் அமெரிக்க படைக்கு கிடைத்தது. இதுதவிர ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிரான அல்-ஷாம் என்ற இயக்கமும் பாக்தாத்தின் நடமாட்டம் குறித்து தகவல் அளித்து வந்தது. இவற்றின் அடிப்படையில் தான் பாக்தாத்-ன் இருப்பிடத்தை அமெரிக்க படை நெருங்கிய போது வெடிகுண்டு வெடிக்க செய்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவல்களில் எது உண்மை என்பது உறுதி படுத்தப்படவில்லை.

இதனிடையே பாக்தாத்-க்கு எதிரான நடவடிக்கை தொடர்புடைய வீடியோக்களை வெளியிடும் திட்டமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க ராணுவ தளபதி மார்க் ஏ.மில்லே, ராணுவ நடவடிக்கை குறித்த காணொளி தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதனை வெளியிட தற்போது நாங்கள் தயாராக இல்லை. அதேபோல தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நாய்களின் தகவல்களையும் வெளியிட முடியாது. ராணுவ நடவடிக்கையின் போது அவை சற்று காயம் அடைந்துள்ளதால், நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். பாக்தாத்-க்கு எதிரான நடவடிக்கையின் போது 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பாக்தாத்தின் உடல் இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு கடலில் அடக்கம் செய்ப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாக்தாத்தின் மரணத்தின் போது காயமடைந்த ராணுவ நாயின் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த நாயின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: