நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல்

பனாஜி: நாப்தா எரிபொருள் ஏற்றப்பட்ட ஆளில்லா சரக்கு கப்பல், கோவா ராஜ்பவன் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவாவில் மர்முகோவா துறைமுக கம்பெனிக்கு சொந்தமான 3 ஆயிரம் டன் சரக்கு கப்பல் நாப்தா  எரிபொருளுடன், மர்முகோவா அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கப்பலில் கேப்டன் உட்பட யாரும் இல்லை. கோவா கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால், அந்த கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கோவா ஆளுநர்தங்கியுள்ள   ராஜ்பவன் நோக்கி வருகிறது. நாப்தா தீ பற்றிக்கூடிய திரவம் என்பதால், இந்த கப்பல் நகர்ந்து வருவது குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கப்பலின் நகர்வை கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய  குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பல் கேப்டன் மீதும் நடவடிக்கை எடுக்கவும்,  கப்பலில் இருந்து நாப்தா கசிகிறதா என்பதை கண்காணிக்கவும் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: