அடிலெய்டு: இலங்கை அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்த முயன்றதாக சர்ச்சையில் சிக்கியதை அடுத்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடைக் காலம் முடிந்ததும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளில் இவர்கள் இருவரும் இடம் பெற்றனர்.இந்த நிலையில், இலங்கை அணியுடன் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ள நிலையில், அனுபவ வீரர்களான இவர்கள் அணியிம் இடம் பிடித்துள்ளனர்.