மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்: நெல்லை ரயில் போக்குவரத்தில் மாற்றம்

நெல்லை: மதுரை கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை வழியாக செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் வண்டி எண். 56319 நாகர்கோவில் -கோயம்புத்தூர் பயணி கள் ரயில் இன்று மற்றும் 25, 29, 30 ஆகிய தினங்களில் கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் இன்றும், 25, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வரும் 30ம்தேதியன்று விருதுநகர் மற்றும் நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56770 வரும் 30ம்தேதியன்று நெல்லை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Advertising
Advertising

பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வரும் 25, 29ம் தேதிகளில் மதுரை மற்றும் நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் வரும் 25, 29ம் தேதிகளில் நெல்லை மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் இன்றும், 25ம் தேதியும் விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 5மணிக்கு புறப்படும் வண்டி எண்.56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் இன்றும், 25ம் தேதியும் மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்றும், 25, 29 மற்றும் 30ம் தேதிகளில் 105 நிமிடங்கள் காலதாமதமாக திருவனந்தபுரம் கோட்டத்திற்கு சென்று சேரும். வண்டி எண் 16129 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இணைப்பு ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு23, 25, 29 மற்றும் 30ம் தேதிகளில் 95 நிமிடங்கள் காலதாமதமாக தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடையும்.

Related Stories: