8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அபூர்வ முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு

அபுதாபி: ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகர் அபுதாபி அருகேயுள்ளது மாராவா தீவு. இங்கு சமீபத்தில் அகழ்வாராய்ச்சியில் தொல்பொருள் துறையினர் ஈடுபட்டனர். அப்போது, ஒரு கட்டிடத்தின் தரையில் இயற்கையான முத்து புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த முத்து 8,000 ஆண்டு் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

புதிய கற்காலத்தை சேர்ந்த இந்த முத்துவுடன், செராமிக் கற்கள், சிப்பிகள் மற்றும் கற்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாக அபுதாபி கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை தலைவர் முகமது அல் முபராக் தெரிவித்துள்ளார். பழைய ஈராக்கின் மெசபடோமியாவுடன் நடந்த வியாபாரத்தின் போது பண்டமாற்று முறையில் இந்த முத்தை இங்கு கொண்டு வந்திருக்கலாம் என தெரிகிறது. வரும் 30ம் தேதி இது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

Related Stories: