மாமல்லபுரம் கடற்கரை அனுபவம் குறித்து தமிழில் மோடி கவிதை வெளியீடு

புதுடெல்லி: மாமல்லபுரம் கடற்கரை அனுபவம் குறித்து, பிரதமர் மோடி தமிழில் கவிதை ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு, சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. முறைசாரா இந்த மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் இருநாட்டு உறவுகள், வர்த்தகம், தீவிரவாதம் குறித்து  முக்கிய ஆலோசனைகளை நடத்தினர். மாநாடு வெற்றிகரமாக நடந்ததாகவும், தமிழக மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி ட்விட் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார். அதில், மாமல்லபுரத்தின் அழகு, கடலோரத்தில் அவர் சென்ற வாக்கிங் அனுபவம் உள்ளிட்டவை குறித்து கவிதை நடையில் எழுதி டுவிட் செய்துள்ளார். அதில் சில வரிகள் வருமாறு:

‘அலைகடலே! அடியேனின் வணக்கம்

அளப்பரிய, முடிவற்ற,

ஒப்பில்லாத, வர்ணனைகளைக்

கடந்த, நிலக்கடலே

உலகிற்கு உயிரளிக்கும் நீ

பொறுமையின் இலக்கணம்

ஆழத்தின் உறைவிடம்....

இவ்வாறு ஒருபக்க கவிதை தொடர்கிறது.

Related Stories:

>