புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன்

அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடரின் 7வது சீசனில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அகமதாபாத் இகேஏ அரங்கில் நேற்று நடந்த பரபரப்பான பைனலில் தபாங் டெல்லி கே.சி. - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் முனைப்புடன் விளையாடி புள்ளிகளைக் குவித்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இடைவேளையின்போது இரு அணிகளும் தலா 17 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

இரண்டாவது பாதியில் ஒருங்கிணைந்து ஆக்ரோஷமாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அடுத்தடுத்து புள்ளிகளை அள்ளி முன்னேறியது.

வாரியர்ஸ் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர். எனினும், கடைசி கட்டத்தில் டெல்லி வீரர்கள் வியூகத்தை மாற்றி கடும் நெருக்கடி கொடுக்க இழுபறி ஏற்பட்டது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 39-34 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக புரோ கபடி கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. அந்த அணிக்கு முதல் பரிசாக ₹3 கோடியும், கடைசி வரை போராடி 2வது இடம் பிடித்த தபாங் டெல்லி கே.சி. அணிக்கு ₹.18 கோடியும் வழங்கப்பட்டது.

Related Stories:

>