செங்கல்பட்டு ஜி.ஹெச். வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்: நோயாளிகள் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு தினமும் 15 ஆயிரம் பேர் புற நோயாளியாகவும், உள்நோயாளியாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பிணவறை அருகில் பல நாட்களாக காலாவதியான எளிதில் தொற்றுநோய் பரவக்கூடிய மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள். அறுவை சிகிச்சையின் போது அகற்றபடும் மனித உடல் உறுப்புகள்  கொட்டப்பட்டு வருகிறது. அவைகளில் கொசு, ஈ, புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவ குப்பைகளை நாய், பன்றி, மாடுகள் கிளறுவதால் துற்நாற்றம் வீசுகிறது. அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அவதியாக உள்ளது. தற்போது  இப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களுக்கும் நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது. தற்போது  தொடர்ந்து மழை பெய்து வருவதால் மருத்துவ குப்பைகளால் கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது.

இதுகுறித்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘அரசு மருத்துவமனையிலேயே இப்படி சுகாதாரமற்ற நிலையில் மருத்துவ கழிவுகளை அவ்வப்போது அகற்றாமல் குவித்து வைக்கின்றனர். மருத்துவ குப்பை உள்ள இடத்தை சுற்றி  காலரா சிகிச்சை பிரிவு, எலும்பு பிரிவு, 500 வார்டு பிரிவு, நெஞ்சக நோய் பிரிவு, பிணவறை உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நாளுக்கு நாள் நோய் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை. மருத்துவ கழிவுகளை தேங்க விடாமல் அவ்வப்போது அகற்றி மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: