கல்லூரி முதல்வரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க ஐகோர்ட் கிளை அனுமதி: டிஎன்ஏவை பாதுகாக்க உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், பச்சேரியைச் சேர்ந்தவர் ஜெயராணி. இவர், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். இவரது மகனுக்கு சிவகங்கை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணுடன், கடந்த மாதம் 11ம் தேதி  திருமணம் நடந்தது. சென்னையில் வசித்த அந்த புதுப்பெண்ணுக்கு தொடர்  வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பரிசோதித்து பார்த்ததில் அவர் மூன்றரை மாத கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. ஸ்கேனில் அது உறுதி செய்யப்பட்டது. குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், அப்பெண், சிவகங்கை தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தபோது கல்லூரி உரிமையாளரும், முதல்வருமான சிவகுரு துரைராஜ் (61) தனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைப்பதாக கூறி  பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பான புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சிவகுரு துரைராஜை கைது செய்தனர். இந்நிலையில், தனது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி, அந்தப்பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு  செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.கோவிந்தராஜ், அந்தப் பெண்ணின் கருவை கலைக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: