சவுதியில் பேருந்து விபத்து 35 வெளிநாட்டினர் பரிதாப பலி

ரியாத்:  சவுதி அரேபியாவில் புனித பயணம் மேற்கொண்ட வெளிநாட்டினர் 35 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் தனியார் பேருந்து ஒன்று மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. மதினா நகரம் அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக கனரக வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த வெளிநாட்டினர் 35 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertising
Advertising

மேலும், 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. விபத்தில் இறந்தவர்கள் அரபு மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள். இதில் இந்தியர்கள் உள்ளனரா என மத்திய அரசு விசாரித்து வருகிறது.

Related Stories: