மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் 5 கோடி பேருக்கு வேலை 2022க்குள் அனைவருக்கும் வீடு: பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜ.வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 21ம் ேததி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.இந்த நிலையில், பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று மும்பையில் தமது கட்சிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும்  மும்பை பாஜ தலைவர் மங்கள் பிரபாத் லோதா ஆகியோரும் உடனிருந்தனர்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். மாநிலத்தை 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லப்படும். வரும் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். 16,000 கோடி செலவில் மராத்வாடா குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள 11 அணைகளும் இணைக்கப்படும். பைப்லைன் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படும். மாநிலத்தில் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில்  ₹5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்பதுபோன்ற உறுதிமொழிகளும் தேர்தல் அறிக்கையில் உள்ளன.

Related Stories: