பாட்னாவில் டெங்கு பாதிப்பு குறித்து பார்வையிட சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மீது இளைஞர் மை வீச்சு

பாட்னா: பாட்னாவில் டெங்கு பாதிப்பு குறித்து பார்வையிட சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மீது இளைஞர் ஒருவர் மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பீஹாரில் வெள்ள பாதிப்பை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் வந்து கொண்டுள்ளனர். டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பாட்னாவில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் போது வெளியில் நின்றிருந்த நோயாளிகளின் உறவினர்கள் மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே மீது நிஷாந்த் ஜா என்ற இளைஞர் மை வீசிவிட்டு தப்பி சென்றார்.

இது குறித்து அமைச்சர் கூறுகையில் பொது மக்கள், ஜனநாயகம் மற்றும் ஜனநாயகத்தின் தூண் மீது மை வீசப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மை வீசிய நிஷாந்த்ஜா டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் எம்பி பப்பு யாதவின், மதச்சார்பற்ற அதிகார் கட்சியை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் மை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் மை வீசியதாக தெரிவித்தார். ஆனால் நிஷாந்த் ஜா தங்களது கட்சியை சேர்ந்தவர் இல்லை என பப்பு யாதவ் கூறியுள்ளார். மை வீசிய அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பீகாரின் பாட்னாவில் கடந்த  மாதத்தில் இருந்து தற்போது வரை 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: