மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

மலேசியாவில் நடைபெறும் 9வது சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், இந்தியா - மலேசியா அணிகள் நேற்று மோதின. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில்  வென்றது. இந்திய வீரர்கள் பிரதாப் லாக்ரா (19வது, 33வது நிமிடம்), ஷிலானந்த் லாக்ரா (39வது நிமிடம்), உத்தம் சிங் (60’) ஆகியோர் கோல் போட்டனர். மலேசியா சார்பில் முகமது ஹசன் (8வது நிமிடம்), முகமது ஜைனுதின் (9வது நிமிடம்)  கோல் அடித்தனர். தொடக்கத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த இந்தியா, பின்னர் தொடர்ச்சியாக 4 கோல் போட்டு அசத்தினர். கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். 2வது போட்டியில் நேற்று நியூசிலாந்துடன் மோதிய இந்தியா 8-2  என்ற கோல்கணக்கில் வென்றது.

Advertising
Advertising

Related Stories: