வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். எனவே, பக்தர்களின் வசதிக்காக, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று நள்ளிரவு 1.20 மணிக்கு தொடங்கி, நாளை நள்ளிரவு 2.15 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து நாைள அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் காலை 5.55 மணிக்கு வேலூர் சென்றடையும். மேலும், விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், இன்று இரவு 9.45 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மேலும், திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: